
வயிற்றுக் குற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். புன்னாலை கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 14ஆம் திகதி வயிற்றுக் குற்று காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.