
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டது.



பருத்தித்துறை பிரதேச செயலக்த்தில் நேற்று காலை 9:00 மணிமுதல் பிற்பகல் 4:00 மணிவரை கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் இடம் பெற்றன.
மூன்று பிரிவுகளிலுமிருந்து நூற்றிற்க்கு மேற்பட்ட உறவுகளை தொலைத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறுவுகள் பல்வேறு அதிருப்திக்கு மத்தியிலேயே குறித்த வசாரணையில் பங்குபற்றியிருந்தனர்.
குறிப்பாக இதுவரை 15 க்கு மேற்பட்ட தடவைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் அவர்களை கண்டுபிடிப்பதற்க்கான நடவடிக்கையோ அல்லது ஒப்படைத்தவர்களிடமோ எந்தவிதமான விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் உறவுகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அலக்களிக்கப்படுகிறார்கள், ஒட்டு மொத்தத்தில் இது ஒரு காலத்தை இழுத்தடித்து இதனை நீத்துப்போக செய்யக்கூடிய நடவடிக்கை என பார்க்கப்படுகிறது.