
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், புது டில்லி பல்கலைக்கழக முதுகலை மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 20/08/2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் தலமையில் இடம் பெற்றது.











இதில் முதல் நிகழ்வாக மங்கள சுடர்களை
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவபூமி அறக்கட்டளைகள் தலைவர் கலாநிதி ஆறு துரைமுருகன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவரும், நிகழ்வின் தலைவருமான பேராசிரியர் கெஎ.ரீ.கணேசலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளரும், சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் உட்பட பலரும் ஏற்றி வைத்ததை தொடர்ந்து வரவேற்பு, உரை, தலமை உரையை தொடர்ந்து ஆசி உரையினை சிவபூமி அறக்கட்டளைகள் தமைவர் கலாநிதி ஆறு திருமுருகன் நிகழ்தியதை தொடர்ந்து பிரதம விருந்தினர் உரையை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி ரகுராம் நிகழ்த்தினார்.
நூல் அறிமுக உரையினை அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வருகை விரிவுரையாளருமான சி.அ.யோதிலிங்கம் நிகழ்த்தினார்.
ஆய்வுரையினை சமூக, அரசியல் விமர்சகர் ம.நிலாந்தனும் நிகழ்த்தினார் தொடர்ந்து புத்தக வெளியீடு இடம் பெற்றது.
தனது தாயருக்காக சமர்ப்பணம் செய்த புத்தகத்தின் முதல் பிரதியினை மகாசேனனது தந்தையார் பெற்றுக்கொள்ள சிவபூமி அறக்ககட்டளைகள் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், கலைத்துறை பீடாதிபதி ரகுராம், அரசறிவியல்துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் உட்பட்ட விருந்தினர்கள் வழங்கிவைத்ததுடன் சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், நலன்விரும்பிகள், மகாசேனனின் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.