உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை வரையிலான வீதியின் மீதி பகுதியும் காப்பெட்டாக மாற்றி போடப்படும் வேலைகள் துரித கதியில் இரவிரவாக இடம்பெற்று வருகிறது.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திட்டம் முன்மொழிவு செய்யப்பட்டிருந்தாலும் வல்வை நாற்சந்தி வரையிலான குறுகிய வீதி தரமாக போடப்பட்டிருந்தது. அதன் பின்பு துரித கதியில் உடுப்பிட்டி சந்தி – சந்தை தாண்டி போடப்பட்டது.
பகலில் போட்ட இந்த வீதியே பம்மிங் ஆக மேடு பள்ளமாக இருக்கிறது. குறித்த வீதி உரிய தரத்துடன் போடப்படவில்லை என துறைசார் பொறியியலாளர்களே ஒப்புக் கொள்ளும் நிலை உள்ளது.
வல்வெட்டித்துறை சந்தி வரையில் வீதி புனரமைக்கப்பட வேண்டி உள்ள நிலையில் திடீரென்று வீதியை காப்பெட் இடும் பணிகள் இன்று இரவிரவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் வருவதால் தேர்தல் கால அவசர புனரமைப்பாக செய்து வீதி உரிய தரத்துடன் போடப்பட வில்லையானால் எதிர்காலத்தில் தாங்கள் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிடும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மக்களின் வரிப்பணம் உரிய முறையில் செலவு செய்யப்பட வேண்டும்.
துரித கதியில் இரவிரவாக போடப்படும் வீதி ஏற்கனவே போட்டது போல் அல்லாமல் தரமாக போடப்பட வேண்டியது அவசியமாகும்.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீதி பொறுப்புடன் புனரமைக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.