இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆவணி 9, ஆகஸ்து 25/2024, ஞாயிற்றுக்கிழமை…!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟬𝟵 🇮🇳꧂_*

*_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟱•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟰 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத சில புதிய பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை தவிர்க்கவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️அஸ்வினி : மாற்றமான நாள்.
⭐️பரணி : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️கிருத்திகை : கற்பனைகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
விளம்பரம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பம் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
⭐️ரோகிணி : கவனத்துடன் செயல்படவும்.
⭐️மிருகசீரிஷம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
செல்வ சேர்க்கையை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். சபைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புலனாய்வு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். போட்டிப் பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை : ஒத்துழைப்புகள் மேம்படும்.
⭐️புனர்பூசம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். சுப காரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். அனுபவம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
⭐️பூசம் : துரிதம் உண்டாகும்.
⭐️ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
சொந்த ஊர் பயண வாய்ப்புகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவால் நன்மை ஏற்படும். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் பெருகும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️மகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️பூரம் : லாபகரமான நாள்.
⭐️உத்திரம் : அதிர்ஷ்டகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நவீன தொழில்நுட்ப கருவிகளால் விரயம் ஏற்படும். அலைச்சல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️உத்திரம் : கவனத்துடன் செயல்படவும்.
⭐️அஸ்தம் : விழிப்புணர்வு வேண்டும்.
⭐️சித்திரை : விரயம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மறைமுகமான வியாபாரங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். முடிந்துபோன சில பிரச்சனைகள் மீண்டும் தொடரலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️சித்திரை : ஆதாயம் ஏற்படும்.
⭐️சுவாதி : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️விசாகம் : ஆதரவான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் ஏற்படும். போட்டிப் பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நெருக்கடியாக இருந்துவந்த சிக்கல்கள் ஓரளவு குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் உண்டாகும். சோதனை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️விசாகம் : ஆதரவான நாள்.
⭐️அனுஷம் : சிக்கல்கள் குறையும்.
⭐️கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
வருவாயை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் விவேகம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️மூலம் : விவேகத்துடன் செயல்படவும்.
⭐️பூராடம் : கவனம் வேண்டும்.
⭐️உத்திராடம் : குழப்பங்கள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உறவினர்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️திருவோணம் : இலக்குகள் பிறக்கும்.
⭐️அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். பகை விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️சதயம் : ஆதாயம் கிடைக்கும்.
⭐️பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
விற்பனை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : பிரச்சனைகள் குறையும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews