
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லையம்பதிஅலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் பத்தொன்பதாவது திருவிழாவான சூர்யோதய திருவிழா திருக்கார்த்திகைத் திருவிழா இன்று காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அலங்கார முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட, அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் முருகப்பெருமான் சூரியோதயப்பீடத்தில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்து உள்வீதி, வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.







இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலயபிரதம குருவான சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
பல இடங்களில் வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.