
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழாவானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்தமண்டபத்தில் எழுந்தருளியாக இருக்கும் வரதராஜப் பெருமாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.




அதனைத் தொடர்ந்து வரதராஜப் பெருமாள் உள்வீதியில் வலம் வந்து, அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரிலே எழுந்தருளியாக அமர்ந்திருந்து வெளிவீதியூடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



இந்த இரதோற்சவ உற்சவத்தினை காண்பதற்கு இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் பக்தர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர்.
பக்தர்கள் காவடி, அங்கப் பிரதிஷ்டை, கற்பூரச்சட்டி என்பவற்றை எடுத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
ஆலயத்தின் கொடியேற்றமானது கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான