
பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட நிலையில், வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது ஆலய சூழலில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமைய வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பொலிஸ் மா அதிபர் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.