




பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொது வேட்பாளரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பரப்புரை பயணத்தின் தொடர்சியாக நேற்றையதினம் தியாகி திலீபன் நினைவாலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது..
தியாகி திலீபன் அவர்களது திருவுருவ படத்திற்கு தமிழ் பொது வேட்பாளர் மலர் மாலை அணிவித்தும், மலரஞ்சலி செலுத்தி அங்கிருந்து கிளிநொச்சி நோக்கி தமது பரப்புரை பணியில் ஈடுபட்டனர்.
இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி பிரசாரப் பயணத்தை தொடர்ந்தனர்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்ககான பரப்புரை பளை இத்தாவில் பகுதியிலிருந்து ஆரம்பமானது.
இங்கு திரண்ட மக்கள் பிரமாண்டமான வரவேற்பை தமிழ் பொது வேட்பாளருக்கு வழங்கினர்.
நூற்றுக்கணக்கான அரசியல், சமூக செயற்பாட்டாளர்கள் திரண்டிருந்ததுடன் பளை பகுதியில் வீடுகள் வர்த்தக நிலையங்களுக்கும் சென்று பரப்புரையில் ஈடுபட்டனர்.