
ஈராக்கின் இஸ்லாமிய அரசின் நிதித் தலைவர் சாமி ஜாசிம் அல்-ஜபுரி ஈராக் எல்லைகளுக்கு வெளியே ஒரு நடவடிக்கையில் ஈராக் தேசிய புலனாய்வு சேவையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாஜி ஹமீத் என்றும் அழைக்கப்படும் ஜாசிம் மறைந்த அபு பக்கர் அல்-பாக்தாதியின் கீழ் ஐஎஸ் அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.
இவரை உயிரிருடன் பிடிப்பவர்களுக்கோ, கொல்லுவோருக்கோ அல்லது இவர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கோ 5 மில்லின் அமெரிக்க டொலர்கள் வெகுமதியை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவர் அமீர் முகமது சயித் அப்துல் ரஹ்மான் அல்-மவ்லாவுடன் நெருக்கமாக இவர் இருப்பதாகக் ஈராக்கின் பாதுகாப்பு ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளத.
பாக்தாதியை சிரியாவில் உள்ள அமெரிக்க சிறப்புப் படையினர் நடத்திய சோதனையின் போது அவர் தற்கொலை செய்துகொண்டார்.
ஐஎஸ் அமைப்பு கிழக்கு ஈராக்கிலிருந்து மேற்கு சிரியா வரை 88,000 சதுர கிமீ (34,000 சதுர மைல்) நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தியது கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்கள் மீது ஆட்சியை நடத்தி வந்தனர். 2017 இல் ஈராக்கிலும் அடுத்த ஆண்டு சிரியாவிலும் போர்க்களத்தில் குழு தோல்வியடைந்த போதிலும், ஆயிரக்கணக்கான போராளிகள் இரு நாடுகளிலும் செயற்பட்டு வருகின்றனர். முக்கியமாக கிராமப்புறங்களில் இயங்குகின்றனர் மற்றும் பாதுகாப்புப் படையினரையும் உள்கட்டமைப்பையும் குறிவைத்து தாக்கும் தாக்குதல்களை நடத்துகின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது