
தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் குழு ஏகமனதாக தீர்மானத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று (29) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன்போது ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது. கலந்துரையாடலிலன் இறுதியில் ஒருமித்த முடிவாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பது என்ற முடிவினை எடுத்துள்ளனரர்.


