
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் , கறுப்புத் துணியால் வாயைக்கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் துவாரகன், பல்கலைக்கழக ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன், கலைப்பீட மாணவர் ஒன்றியம் தலைவர் நெவில்குமார், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விதுசன், விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.