
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று வெள்ளிக்கிழமை (30/08/2024) கிளிநொச்சியிலும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.










கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பேரணி கிளிநொச்சி மீனாச்சி அம்மன் ஆலயம் வரை சென்று அங்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீள கிடைக்க வேண்டும் என தெரிவித்து சிதறு தேங்காய் உடைத்துள்ளனர்.
இதில் அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்கியிருந்தனர்