நாளைய நாள் உங்களுக்கு எப்படி, குரோதி வருடம் ஆவணி 17, 02/09/2024 திங்கட்கிழமை…!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟭𝟳  🪔꧂_*
*_🌼 திங்கள் -கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟮• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்களுக்கு மதிப்பு மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️அஸ்வினி : இலக்குகள் பிறக்கும்.
⭐️பரணி : புரிதல்கள் உண்டாகும்.
⭐️கிருத்திகை : அனுபவங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்விப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். நிறைவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
⭐️ரோகிணி :  வரவுகள் மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சொத்து சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். கைப்பேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். அனுபவம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️மிருகசீரிஷம் : தீர்வுகள் கிடைக்கும்.
⭐️திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️புனர்பூசம் : பயணங்கள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தன வரவுகள் மேம்படும். பழைய பிரச்சனைகள் குறையும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் முயற்சிகள் பலிதமாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறதி விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
⭐️பூசம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️ஆயில்யம் : முயற்சிகள் பலிதமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
பணிகளில் பொறுப்புகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் திருப்தி ஏற்படும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு நிலை மேம்படும். மனதளவில் புதிய பக்குவம் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் தோற்றத்தில் மாற்றம் உண்டாகும். தெளிவுகள் பிறக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.

⭐️மகம் : பொறுப்புகள் மேம்படும்.
⭐️பூரம் : பிரச்சனைகள் நீங்கும்.
⭐️உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
அரசு பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். தொழிலில் புதிய கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். ரகசியமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️உத்திரம் : தாமதங்கள் குறையும்.
⭐️அஸ்தம் : அனுபவங்கள் கிடைக்கும்.
⭐️சித்திரை : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் திறமைகள் வெளிப்படும். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும். முயற்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
⭐️சுவாதி : ஆதாயம் உண்டாகும்.
⭐️விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். தன வரவுகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய உறவினர்களின் சந்திப்புகள் உண்டாகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️விசாகம் : ஒற்றுமை ஏற்படும்.
⭐️அனுஷம் : லாபம் மேம்படும்.
⭐️கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். வாழ்க்கை துணைவரால் ஆதாயம் உண்டாகும். அனுகூலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️பூராடம் : சாதகமான நாள்.
⭐️உத்திராடம் : மதிப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். எதிர்பார்த்த சில பயணங்களில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். குழந்தைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். புதிய நபர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐️உத்திராடம் : பொறுமை வேண்டும்.
⭐️திருவோணம் : தாமதம் ஏற்படும்.
⭐️அவிட்டம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒  கும்பம் – ராசி: 🍯_*
வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களால் ஒத்துழைப்பு உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️அவிட்டம் : கவனம் வேண்டும்.
⭐️சதயம் : சுறுசுறுப்பான நாள்.
⭐️பூரட்டாதி : ஒத்துழைப்பான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி:  🐟_*
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். வழக்குப் பணிகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️பூரட்டாதி : ஆர்வம் மேம்படும்.
⭐️உத்திரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️ரேவதி : சாதகமான நாள்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews