
தமிழ் மக்கள் ஒன்றி திரண்டு ஒருமித்த குரலாக சங்குச் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் திரு.வேந்தன் தெரிவித்துள்ளார்.









யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
குறித்த பரப்புரை சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரன் அவர்களுக்காக தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பாக முன்னெடுக்கப்படுகிறது.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மணல்காடு, கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டனர்.