காரைநகர் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் கேதீஸ்வரன் கொவிட் 19 நோய்தொற்று காரணமாக கடந்த பதினைந்து நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பிரதி தவிசாளர் பாலச்சந்திரன் சபையின் அனுமதியுடன் தனிப்பட்ட பயணமாக கனடா சென்றுள்ள சமயத்தில் தன்னிச்சையான முறையில் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று விசேட கூட்டத்தினை கூட்டியுள்ளனர்.
இடைக்கால தலைவர் ஒருவரை தேர்வு செய்வதற்கு உள்ளூராட்சி ஆணையாளரிற்கு பிரதேச சபை உறுப்பினர்களின் கையொப்பத்தை திரட்டி கடிதம் ஒன்றை அனுப்ப இன்றைய தினம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.
தற்போதைய தவிசாளர் அதி தீவிர சிகிச்சையில் இருக்கின்ற மனிதாபிமானத்தை கருதாது மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பதவி மோகத்திற்காக இவ்வாறு நடந்திருப்பது கவலையளிப்பதோடு தவிசாளர் கேதீஸ்வரன் விரைவில் கொடிய நோயில் இருந்து மீண்டு வர பிரார்த்திப்பதை விடுத்து அடுத்த தவிசாளர் யார் என்ற பேரம்பேச்சுக்கள் இப்பவே ஆரம்பித்துவிட்டதாக காரைநகர் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.