வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அணுசரணையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாச்சாரப் பேரவையும் இணைந்து நடாத்திய வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டுப் பெருவிழா நேற்று 03.09.2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில்
பிரதான நுழைவாயிலில் இருந்து விருந்தினர்கள் மாலை அணிவித்து மண்டபம் நோக்கி வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு காலை 09.00 மணியளவில் ஆரம்பமானது.
குறித்த பண்பாட்டு பெரு விழாவில் அரங்க திறப்பு, நடேச கெளத்துவம், கிராமிய பாடல்கள், ஓகன் இசை, சிவதாண்டவம், சிந்துநடைக்கூத்து, நாட்டுக் கூத்து, கலைஞர் கெளரவிப்பு போன்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணத்தினுடைய பண்பாட்டலுவல்கள் அலகு பிரதி பணிப்பாளர் திருவாட்டி லாகினி நிருபராஜ்,
வடமாகாணத்தினுடைய மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஓய்வு நிலை ஆணையாளர் வல்லிபுரநாதர் பத்மநாதன், கெளரவ விருந்தினர்களாக யாழ் மாவட்ட செயலக சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் சுகுணாலினி விஜயரத்தினம்,
மூத்த கலைஞர்களான கலைச்சாரம் செல்லையா பரமானந்தம்,
அண்ணாவியார் அந்தோனிப்பிள்ளை பிலிப்பையா ஆகியோர் கலந்து கொண்டதுடன் அதிகளவான பொதுமக்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.