
தமிழ்ப் பொதுவேட்பாளரின் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பட்டிப்பளை பிரதேசத்தில் பரப்புரை பணிகளை முன்னெடுப்பதற்கான பரப்புரை ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று முன்தினம் (03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனின் சங்கு சின்னத்திற்கு ஆதரவாக பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேசத்தில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பரப்புரை பணிகளை முன்னெடுக்கும் வகையில் பரப்புரை ஒருங்கிணைப்புக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
பரப்புரை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மாவட்ட குழுவினரது ஏற்பாட்டில் பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட பதினொரு கிராமங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் கொக்கட்டிச்சோலை அரசடித் தீவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலாந்துரையாடப்பட்டிருந்தது.