
தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கிலும் தீிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சங்கு சின்னத்தில் போட்டியிடும் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நேற்று 06.09.2024 பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.







தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு மக்கள் இடையே பெருகிவருவதாக தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்தவருமாகிய ஆனந்தராசா சுரேஷ்குமார் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு பொது வேட்பாளருக்கு அமோக ஆதரவை வழங்கவேண்டுமெனவும் தமிழ் மக்களை கேட்டுக் கொண்டார்.
இதில் ஜனநாயக போராளிகள் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர், தாளையடிகடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர்.