
சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மணவியான கிருசாந்தி உள்ளிட்ட செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து நினைவேந்தல் இன்றையதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
செம்மணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் மாலை 5 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது.






இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டனர்.