நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,
தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமம் ரூபா 550,000 நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு பொறுத்தப்பட்டு நேற்று காலை 10.15 மணியள
வில் பாடசாலை சமூகத்திடம் சம்பிர்தாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
பாடசாலை முதல்வர் நாகராஜா ரவீந்திரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் கலந்துகொண்டு சுத்திகரிப்பு குடிநீர் தொகுதியை திறந்துவைத்து கையளித்தார்.
இவ் நிகழ்வில் மருத்துவர் திரு. செந்தில் குமரன், பாடசாலை பழைய மாணவர் சங்க நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள்,
மற்றும் ஆச்சிரம தொண்டர்கள் என பெருமளவானோர் பங்கு கொண்டனர்.
இதேவேளை வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழாவை முன்னிட்டு,
பெரியாழ்வார் அன்னதான மடம், ஆதிமூல லஷ்சுமி ஈசான அன்னதான மடம், பரந்தாமன் ஆச்சிரமம் என்பனவற்றிற்கு அன்னதானப் பொருட்களாக
1500 கிலோ அரிசி, 225 கிலோ பருப்பு, 150 கிலோ சீனி, 60 லீற்றர் மரக்கறி எண்ணை, 75கிலோ உள்ளி, 15 கிலோ அப்பளம், 50கிலோ சோயா, 250 தேங்காய் மற்றும் மரக்கறி வகைகள் என்பன நேற்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கையளிக்கப்பட்டது.