
சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்வதற்கு தயாராக இருந்த 63 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர் . குறித்த அனைவரும் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர் . இவர்கள் கிளிநொச்சி , யாழ்ப்பாணம் , வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது .