
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 320 ஆண்மீக சஞ்சிகை வெளியீடும், பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வும் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் திரு.சிவநாதன் தலமையில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் திருமுன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை 13/09/2025 இடம் பெற்றது.




இதில் முதல் நிகழ்வாக பஞ்ச புராணம் ஓதப்பட்டது. அதனை தொடர்ந்து வெளியீட்டுரையினை சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான இரா.சிறிநடராசா நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன.









அத்துடன் உதவித் திட்டங்களாக,
யா/ அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தின் கோரிக்கைக்கு அமைவாக,
மாணவர்களின் பரீட்சை தேவைகளுக்காக எழுதுபொருள் வகைகள் வழங்கப்பட்டன் முல்லைத்தீவு
முல்லை இசைக்கலாலயத்துக்கு பிள்ளையார் சிலைக்கான நிதியாக ரூஒஅ 25,000 ரூபா வழங்கப்பட்டது. அதேவேளை மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்திற்கு,
மூளாய் பிரதேச பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென 500 கிலோ கிராம் அரிசியும் வழங்கிவைக்கப்பட்டது.
மலையகம் – பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த ப/ சௌதம் தமிழ் மகா வித்தியாலயத்தினுடைய மாணவி ஒருத்தியின் மேற்படிப்புக்காக ரூபா 50,000 நிதியும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.