மாவை சேனாதிராசா தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைபின் யாழ் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் (15) ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்றிருந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.
வவுனியாவில் இடம் பெற்ற தமிழரசு கட்சி கூட்டத்தில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையிலேதான் சமஷடி தீர்வு தொடர்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவரிற்க்கே தமிழரசு கட்சியின் ஆதரவு என தெரிவித்துவிட்டு செல்லும் வழியில் தமிழ் பொது கட்டமைப்பு அலுவலகத்திற்க்கு சென்று தனது முழுமையான ஆதரவு சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு என தெரிவித்திருக்கின்றார். ஆனால் மாவை சேனாதிராசா அவர்களது புதல்வன் கலையமுதன் சங்கு சின்னத்திற்க்கு ஆதரவு தெரிவித்து பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றார்.
கலை அமுதனது மனைவியின் தாயர் திருமதி ரவிராஜ் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவது குறிப்பிடதக்கது .