
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது






நேற்று செவ்வாயக்கிழமை 17/09/2024 பிற்பகல் 3 மணியிலிருந்து விசேட பூசைகள் இடபெற்று அதனை தொடர்ந்து வசந்த மண்ட பூசை இடம் பெற்றது. அதனை தொடர்ந்து 5:14 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் ஆஞ்சநேயர் முன்னேவர தொடர்ந்து விநாயகரும் அவரை தொடர்ந்து மகாலக்ஷ்மியும் தொடர்ந்து வர வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் கற்கோவளம் கடற்கரையில் பல்லாயிரம் அடியவர்கள் சூழ சமுத்திர தீத்தமாடினார்.















கடந்த 02/09/2024 அன்று கொடியேற்றம் பெருந்திருவிழா ஆரம்பமாகி இன்று 16 ம் திருவிழாவான சமுத்திர தீத்த திரு விழாவிற்க்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்துகொண்டிருந்தனர்.
பல அடியார்கள் தூக்கு காவடி, பால்க்காவடி, அங்க பிரதஸ்டை, பால்குடம் போன்ற பல்வேறு நேற்றிக்கடன்களையும் நிறைவேற்றினர்.
இதேவேளை மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன் மக்களிறக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை போலீசாரும் மேற்கொண்டிருந்தனர்.