
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண் பாட்டு பேரவையின் ஏற்பாட்டில், வாராந்தம் இடம் பெறும் நிகழ்வில் நேற்றைய தினம் 20/09/2024 செல்வன் டிகுகுமார் சாகிதியன் அவர்களின் தெய்வீக இன்னிசை கச்சேரி இடம் பெற்றது. இதில் முகர்சிங் – ர.காணாமிர்தசர்மா தபேலாவும், நடேசு செல்வச்சந்திரன் ஹார்மோனியமும், உ.உ.ஹிதுதன் மிருதங்கமும் கலாவித்தகர் மகேந்திரம் பிரபா ஆகிய அணிசெய் கலைஞர்களாக இணைந்திருந்தனர்.









இதேவேளை யா/ வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவி, யா/ மகாஜனக் கல்லூரியில் தரம் – 08 இல் கல்வி கற்கின்ற மாணவி,
நீர்வேலி தெற்கை சேர்ந்த தரம் – 06 இல் கல்வி கற்கும் 02 மாணவர்கள் ஆகியோருக்கு தலா ஒவ்வொரு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
சந்நிதியான் ஆச்சிர முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் திருமுன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர் ஓய்வு பெற்ற ஆசிஈயர் திரு சிவநாதன் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், தொண்டர்கள் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் உறுப்பினர்கள் பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த 15;09/2024 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில்
கேப்பாப்பிளவு கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பதிற்க்கு
கடற்றொழில் சுயமாக மேற்கொள்வதற்காக ரூபா 66,000 ரபெறுமதியான கடற்தொழில் மீன்பிடி வலைகளும் வழங்கிவைக்கப்பட்டன