
இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட அவர் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.



கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ் மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட பலருடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
இன்றைய தினம் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனுடன் அவர் சமகால அரசியல் நிலவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.