
அதன் பிரகாரம் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட்தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.