புதிய ஜனாதிபதியாக அனுரா, உத்தியோக பூர்வ அறிவிப்பு…!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை.

எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன.

இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட வாக்குகள் அதிகமாக பெற்று அநுர குமார திஸாநாயக வெற்றிபெற்றுள்ளார்.

இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் எந்தவொரு வேட்பாளரும் வெற்றி பெறுவதற்குத் தேவையான 50 வீதத்தை தாண்டியிருக்கவில்லை.

எனினும் இரண்டாவது, மூன்றாவது வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்ற வகையில் அனுரகுமார வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை அவரது பதவியேற்பு வைபவம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews