
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை, யாழிலிருந்து மின்கம்பங்கள் ஏற்றிவந்த வாகனம் மோதியுள்ளது.
குறித்த மின்சார சபை வாகனம் மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ளனர். சம்வம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.