
யாழில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இதன்போது கச்சேரி, நல்லூர் வீதியை சேர்ந்த திருநாவுக்கரசு வெலிற்றன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞனும் யுவதியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பெண் வெளிநாடு செல்வதற்காக இளைஞனுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் மன விரக்தியடைந்த இளைஞன் நேற்று (27/09/2024)காலை தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.