
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பொன் விழா மற்றும் சர்வதேச சுற்றுலா தினம் ஆகியவற்றை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் கைப்பணிப்பொருள் சந்தை, காலாசார திருவிழா நேற்றையதினம் கோலாகலமாக ஆரம்பமாகியது.




இதன்போது பல்வேறு வகையான உணவு உற்பத்திகள், பனைசார்ப் உற்பத்திகள், கைவினைப் பொருட்கள் என பலவிதமான உள்ளூர் உற்பத்திகளின் கண்காட்சியுடன் விற்பனைகளும் இடம்பெறுகின்றன.
நேற்று ஆரம்பித்த இந்தக் கண்காட்சியானது இன்றும் மற்றும் நாளையும் (28,29) நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகின்றது.