
கடந்த வியாழக்கிழமை அதிகாலை பென்னாலை கிருஷ்ணன் கோயிலுக்கு பின்புறம் உள்ள புதர் ஒன்றினுள் வைத்து, 5மாதங்கள் கர்ப்பிணியான பசுமாட்டை சிலர் இறைச்சிக்காக வெட்டியுள்ளனர்.


பொன்னாலை மேற்கை சேர்ந்த இருவர் இந்த பசுமாட்டினை வெட்டியாக அறிய முடிகிறது. இதுகுறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், பசுவினை வெட்டியவர்கள் மூவரை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
அவர்கள் மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.