
லயன்ஸ் கழகத்திதின் நாட்டை தூய்மையாக்குவோம் (cleanup srilanka) எனும் தொனிப்பொருளிலான கடற்கரையை சுத்தமாக்கும் சிரமதானப்பணி நேற்று 28/09/2024 வடமராட்சி பருத்தித்துறை தும்பளை கடற்கரையில் வட பிராந்திய தலைவர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் தலமையில் காலை 7:30 மணிமுதல் இடம் பெற்றது.













யாழ்ப்பாணத்தின் ஏழு லயன்ஸ் கழகங்கள் இணைந்து முன்னெடுத்த குறித்த சிரமதானப்பணியில் பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பாதிகாரி தலமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான சுமார் முப்பதிற்க்கு மேற்பட்ட போலீசாரும், தும்பளை கிழக்கு சமுர்த்தி குழுக்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்ததுடன் பருத்தித்துறை நகரசபை கழிவுகளை ஏற்றிச்செல்வதற்க்கான வாகனத்தை வழங்கியிருந்தது.