கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், இலங்கைக்கான நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் சேதனப்பசளையை ஊக்குவிக்கும் விடயத்தில் அனைத்து நாடுகளும் கிழக்கு மாகாணத்தை அவதானித்துக் கொண்டிருப்பதாகவும், கிழக்கின் விவசாயத்தை ஊக்குவிக்கும் விடயத்தில் மிகவும் கரிசனையாக இருப்பதாகவும் நெதர்லாந்து உயரிஸ்தானிகர் குறிப்பிட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.
நெதர்லாந்து சிறிய நாடாக இருந்தாலும் சேதன பசளை தயாரிக்கும் விடயத்தில் சர்வதேச மட்டத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இதன்போது தெரிவித்தார்.
மேலும் கிழக்கு மாகாண சுறுலாத்துறையை மேம்படுத்துவது குறித்தும் கல்வி விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
மேலும் இதன்போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித
பி.வணிகசேகர மற்றும் பல அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.