
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று 01/10/2024 செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.




காலை 10 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் சிறுவர்களாக கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டியும், சிறு பிள்ளைகளாக இருந்த நிலையில் பெற்றோர்களாக கையளிக்கட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறிவுகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.