மண்முனை வடக்கு சௌபாக்கியா உற்பத்திக் கிராமத்தின் வீதிக்கான பெயர்ப்பலகை திறப்பு மற்றும் சின்ன ஊறணி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பனம்பொருள் உற்பத்தி நிலையம் அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று நடைபெற்றது
சமுர்த்தி வதிவிட பொருளாதார நுண் நிதிய சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வறுமை ஒழிப்பு ஐந்து வருட திட்டத்தின் கீழ் சௌபாக்கியா பனைசார் உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகபிரிவில் சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, சின்னஊறணி ,திராய்மடு ஆகிய ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளை இணைந்த சௌபாக்கியா உற்பத்திக் கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
பனைசார் சுயதொழில் உற்பத்திகளை மேம்படுத்தும் வகையில் ஐந்து கிராமங்களை இணைத்து ஆரம்பிக்கப்பட்ட சௌபாக்கியா உற்பத்திக் கிராமங்களில் இன்றைய தினம் சின்ன ஊறணி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.