
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவி சரவணன் அனந்தினி தேசிய மட்டத்தில் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஆகக்கூடிய எடையான (73 கிலோவிற்கு மேல் ) 18 -20 வயதுப் பிரிவின் கீழ் கராத்தே தைக்குண்டோ எனும் காலால் மட்டும் தாக்கும் விளையாட்டில் வெண்கல பதக்கத்தை பெற்று இந்த போட்டியில் பாடசாலை வரலாற்றில் முதல் தடைவை பங்குபற்றி சாதனை படைத்துள்ளார்.




மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கு மாகாணத்திற்கான இந்த போட்டியில் பங்குபற்றி மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவான இவர் கடந்த 28 தொடக்கம் 30ம் திகதிவரை இரத்தினபுரியில் இடம்பெற்ற தேசிய மட்ட போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடத்தை பெற்று வெண்கல பதக்கத்தை சுவீகரித்தார்.
இவர் மட்டக்களப்பு எஸ்.கே.ஓ. கராத்தே கழகத்தைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்களான கே.ரி.பிரகாஸ், க.குகதாசன், வி.விமல்ராஜ், கணேசலிங்கம் ஆகியோரின் மாணவியான இவரை கடந்த 01/10/2024 அன்று பாடசாலை சமூகம் நினைவு கேடயம் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது