யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில், பிரதி வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் வாராந்த நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் 11.10.2024 காலை 10:45 மணியளவில் ஆச்சிம மண்டபத்தில் இடம் பெற்றது.
பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் கலாவித்தகர் குணராசா நக்கீரன் அவர்களின் குழலும், குரலும் என்ற தெய்வீக இன்னிசை விருந்தில் குரல் இசை பாடலும் புல்லாங்குழல் இசையும் இடம் பெற்றது.
இதில் வயலீன் இசையினை நுண்கலைமாணி இராசரத்தினம் நிரோஜன் அவர்களும்,
கீபோட் இசையினை இன்னிசைக் கலைமணி நடேசு செல்வச்சந்திரன் அவர்களும்
மிருதங்கம் இசையினை கலாவித்தகர் வரதராஜசர்மா ரமணசர்மா ஆகியோர் வழங்கினர்.
இதில் உதவித்திட்டங்களாக
நவக்கிரி, அச்சுவேலியை சேர்ந்த. யா/ அச்சுவேலி மத்திய கல்லூரியில் தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவனுக்கும், கலைமகள் வீதி, நல்லூர் வடக்கை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பமான. யா/ நல்லூர் ஸாதனா சி/சி/த/க/ பாடசாலையில் தரம் – 07 இல் கல்வி கற்கின்ற மாணவி ஒருத்திக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள் எல பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.