
காவேரி கலா மன்றம், கற்பகம் இயற்கை நேய செயலணி இளையோர் நாடக குழு ஆகியன இணைந்து இரண்டு நாள் பயிற்சி செயல் அமர்வை கடந்த 11, 12 ஆகிய திகதிகளில் சங்கானை பொது நூலகத்தில் நிகழ்த்தினர்.






அதன் இறுதி அரங்கேற்றத்தினை 12.10.2024 அன்று சுழிபுரம் பெரியபுலோ அண்ணா கலையரங்கில் நிகழ்த்தினர்.
இதன்போது பறைஇசை ஆட்டம், கழியலாட்டம், நாட்டார் பாடல்கள், உடன் நாடக அரங்கு என்பன நிகழ்த்தி மக்களை மகிழ்வூட்டினர். குறிப்பாக உடன் நாடக அரங்கினை நடித்தோர் பார்வையாளர்களின் பாராட்டினை வாரி குவித்தனர்.
சர்வதேச கலை பரிமாற்று நிகழ்வு என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த கலைநிகழ்வை, தென் இந்தியாவில் இருந்து வருகை தந்த கலைஞர்கள் பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.