
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி இராணுவம், போலீஸ் இணைந்து சோதனை சாவடியில் இடம் பெற்ற முச்சக்கரவண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் நேற்றிரவு 7:15 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
உந்துருளி, மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டிமூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சோதனைச்சாவடியில் இரவு வேளையில் தெளிவாக இனங்காணக்கூடிய மின் விளக்கு சமிக்கைகள் இன்மை காரணமாக குறித்த விபத்து இடம் பெற்றிருக்காலாம் என தெரிவிக்கப்படுகிறது
குறித்த சோதனைச்சாவடி பகுதியில் பல விபத்துக்கள் இடம் பெற்றிருந்தமை குறிப்பிட தக்கது.