யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் புத்தளம் சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பல்லின மதங்களை சேர்ந்த தரம் – 01 தொடக்கம் தரம் – 05 வரையான 175 மாணவர்களுக்கு ரூபா 74,000 பெறுமதியான உணவு கொண்டுசெல்லும் சில்வர் பெட்டிகள், மற்றும் சிற்றுண்டி வகைகளும் இன்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு பாடசாலை அதிபர்
அருட்சகோதரி எஸ்.ஜெனட் ரொட்ரிகோ புள்ளே தலைமை
யில் காலை 11.15 மணியளவில் இடம்பெற்றது.
இதேவேளை புத்தளம் சேனைக்குடியிருப்பு, மணல்
குன்று, அபயபுர பிரதேசங்களில் வாழும் பல்லின சமூகங்களை சேர்ந்த,
புத்தளம் இந்து மத்திய கல்லூரி, சென்
மேரீஸ் மகா வித்தியாலயம், சென் என்றூஸ் கல்லூரி, மணல்குண்டு வித்தியாலயம், செய்னப் முஸ்லிம் கல்லூரி, ஆனந்த மத்திய கல்லூரி, சாஹிரா தேசிய பாடசாலை, தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளில் கல்விகற்கும் தெரிவு செய்யப்பட்ட 63 மாணவர்களுக்கு ரூபா 136,000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ் நிகழ்வு சமூகசேவையாளரும், கருமாரி
யம்மன் ஆலய ஸ்தாபகருமன எஸ். மகேந்திரன் தலைமையில் சேனைக்
குடியிருப்பு பத்தினியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
இவ் உதவித் திட்டங்களை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையிலான ஆச்சிரம தொண்டர்கள் நேரில் சென்று வழங்கிவைத்தனர்.