
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஓராம் கட்டை பகுதியில் அமைந்துள்ள சிபு தையல் பயிற்சி நிலையத்தினரின் இரண்டாம் அணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அதன் இயக்குநர் திருமதி சிபுசா நிதர்சன் தலமையில் நேற்று வியாழக்கிழமை 17/10/2024 காலை 10:30 மணியளவில் பருத்தித்துறையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் மங்கல விளக்கேற்றலுடண் ஆரம்பமானது.








மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினரும், ஜனாதிபதி சட்டத்தரணியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம், ஏ சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள தையல் போதனாசிரியர் திருமதி பவானி ஆழ்வாப்பிள்ளை,
வரணி சமுர்த்தி வங்கி முகாமையாளர் பொ.குகதாஸ், ஹெல்திலக்ஸா நிறுவன வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் பெ.பிரேமராசா, கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட தையல் போதனாசிரியர் வரதராசா இன்பராணி, சாஜீ அழகுக்கலை நிலைய இயக்குநர் சூரிய குமார் சுனித்தா
உள்ளிட்ட விருந்தினர்கள் ஏற்றிவைத்ததை தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்பு உரை என்பன இடம் பெற்றது.
கருத்துரைகளை ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் ஏ.சுமந்திரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன்,
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள தையல் போதனாசிரியர் திருமதி பவானி ஆழ்வாப்பிள்ளை, ஆகியோர் நிகழ்த்தினர்.
அதனை தொடர்பு சிபு தையல் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற 45 இரண்டாம் அணி மாணவர்களுக்கான சான்றிதழ்களை நிகழ்வின் பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் சிபு தையல் நிலையத்தில் பயிற்சி பெற்று தனியாக தையல் நிலையம் நடாத்தும் இரண்டு தொழில் முயற்சியாளர்கள் சிலை தையல் பயிற்சி நிலையத்தால் கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர் மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர், தையல் பயிற்சி பெற்ற மாணவர்கள், பேராளர்கள், என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.