
செல்வி சிவாந்தினி பாலசுப்பிரமணியம் அவர்களின் வானம் வசப்படுமா எனும் கவிதை நூலும், செல்வன் நேசராசா சந்தோசின் கருவுயிர்ப்பு எனும் ஓவிய நூல் ஆகிய இரு நூல்களும் வெளியீட்டு விழா வடமராட்சி பருத்தித்துறை சிவப்பிரகாச வித்தியாசாலை மண்டபத்தில் கோட்டை கட்டிய குளம் அதிபரும் கவிஞருமான சு.க சிந்துதாசன் தலமையில் நேற்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆரம்பமானது.










இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பூங்கொத்து கொடுத்து விழா மண்டபம் வரை அழைத்து வரப்பட்டு அங்கு மங்கல விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்து, தலமை உரை என்பன இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து வெளியீட்டுரையினை ஜீவநதி ஆசிரியர் கலாமணி பரணீதரன் நிகழ்த்தினார்.






வானம் வசப்படுமா, கருவுயிர்ப்பு ஆகிய இரு நூல்களையும் ஓய்வு பெற்ற அதிபர் கி. நடராசா வெளியீட்டு வைக்க வானம் வசப்படுமா எனும் கவிதை நூலை ஓய்வு பெற்ற அதிபர் சோ.வாகீசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கருவுயிர்ப்பு ஓவிய நூலினை யா.சிவப்பிரகாசம் வித்தியாலய ஆசிரியை ந.நாமகள் பெற்றுக்கொண்டார்
மதிப்பீட்டு உரையினை கவிஞரும் பளை பிரதேச செயலாளரிமான இ.த. ஜெயசீலன் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ஏழுத்தாளர்கள், கவிஞர்கள், சமுக செயற்பாட்டாளரள்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.