
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார தலமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் ஏழாலை கிழக்கு, சுன்னாகத்தில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த வயது 28 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து 840 போதை மாத்திரைகள் கைப்பற்றபட்டு சுண்ணாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.F.M. பெடோஸ் அவர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.



இவர் ஏற்கனவே ஒருதடவை போதை மாத்திரைகளுடன் கைதான வழக்கு யாழ். உயர் நீதிமன்றில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.