மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஶ்ரீநேசனின் ஆதரவலையை குறைக்க சாணக்கியன் போட்ட இரகசிய சதித்திட்டம் தீட்டுவது அம்பலமாகியுள்ளது.
மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சாணக்கியன் நேற்றுமுன்தினம் (22,10,2024) இரவு 7.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணிவரை களுவாஞ்சிகுடி கடற்கரை தோட்டத்தில் உள்ள தனது பங்களாவில், ஶ்ரீநேசனை தோற்கடிக்க, சுமந்திரன் வழங்கிய சதித்திட்ட ஆலோசனையை ஆதரவாளர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அன்று இடம்பெற்ற இரவு விருந்தில், தமிழரசு கட்சியில் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களான வைத்தியர் ஶ்ரீநாத்,
முன்னாள் மேஜர் சரவணபவன், வாலிபர் அணி தலைவர் கி.சேயோன் ஆகிய வேட்பாளர்களுடனேயே இந்த விசேட இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அந்த மூன்று வேட்பாளர்களுடன் சென்ற ஆதரவாளர்களை வேறு இடத்தில் நிற்க வைத்துவிட்டு சாணக்கியன், ஏனைய மூன்று வேட்பாளர்களான மேற்குறித்த மூவரையும் ஒரு அறையில் தனியாக வைத்து நீண்ட நேரம் தேர்தல் பற்றி உரையாடியுள்ளார்.
உரையாடும்போது சுமந்திரனும் மூவருடனும் தொலைபேசியில் கதைக்க ஒழுங்கு செய்யப்பட்டு அவரும் அந்த ஆலோசனை கூறியுள்ளார்.
இதுதான் அந்த ஆலோசனை. “ஶ்ரீநேசனை வெற்றி பெறாமல் தடுத்து விருப்பு வாக்குகளை அவருக்கு செல்லாமல் வைத்தியர் ஶ்ரீநாத்துக்கு வாக்குகளை வழங்கி அவரை வெற்றிபெற வைக்கவேண்டும். அவரும் சாணக்கியனும் பாராளுமன்றம் செல்லவேண்டும். ஶ்ரீநேசனை தோற்கடிக்க வேண்டும் அதற்கான வழி சேயோன், சரவணபவன், இருவரும் தமது பிரசாரத்தை 2ஆம் இலக்கமான ஶ்ரீநாத்துக்கும், 3ஆம் இலக்கமான சாணக்கியனுக்கும் மட்டும் பிரசாரம் செய்வதுடன் தமது இலக்கங்களான சேயோனின் 4ஆம் இலக்கத்திற்கும், சரவணபவனுடைய 7ஆம் இலக்கத்துக்கும் வாக்களிக்கவேண்டாம் என கூறும்படியும் ஶ்ரீநாத்துடன் இணைந்து பிரசாரம் செய்யுமாறும் பணிக்கப்பட்டது. இந்த இருவரையும் மாகாணசபையில் வேட்பாளராக நிறுத்தி தாம் வெற்றிபெற வைப்பதாகவும் உறுதி கூறப்பட்டது.
இந்த விடயத்தை கூறியபோது சேயோன் கேட்டகேள்வி “ஏன் 1ஆம் இலக்க வேட்பாளர் கருணாகரன், 8ஆம் இலக்க வேட்பாளர் சர்வானந்தன், 5ஆம் இலக்க வேட்பாளர் ஜெயந்தி ஆகியோரை அழைக்கவில்லை” என சாணக்கியனிடம் கேட்டபோது, அவர்களை எனக்காக பிரசாரம் செய்ய சொல்லியுள்ளேன். இது இரகசியமான திட்டம் அவர்களுக்கு சொன்னால் வெளியில் உண்மை தெரிந்துவிடும்.
சுமந்திரன் உங்கள் மூவருக்கும் மட்டுமே இதை கூறச்சொன்னார் என்றார்.
வைத்தியர் ஶ்ரீநாத், “ஏன் ஶ்ரீநேசனை தோற்கடிக்க வேண்டும் அவரும் பிரசாரம் செய்யட்டுமே” என கேட்டிருக்கிறார்.
அதற்கு சாணக்கியன் கூறிய பதில் ஶ்ரீநேசனை வேட்பாளராக போடக்கூடாது என்பதில் சுமந்திரன் திடமாக இருந்தார் ஆனால் சிலரின் தூண்டுதலால் வேட்பாளராக போடப்பட்டாலும் அவரை வெற்றி பெறவைத்தால் அவர் சீனியர் என்று கட்சியில் ஈடுபடுவார் நான் யூனியராக இருக்க வேண்டிவரும்.
அவர் இல்லை எனில் நான்தான் தமிழரசுகட்சியில் தொடர்ந்தும் மாவட்ட தலைவராக தொடர்ந்தும் செயல்படமுடியும்.
அதைவிட ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டிய அரியநேத்திரன், யோகேஷ்வரன், நடராசா இதுபோன்ற சிலர் மீண்டும் தமிழரசுகட்சிக்குள் ஆதிக்கம் காட்டி மக்களை குழப்புவார்கள் இதற்கு இதுதான் ஒரேவழி என்றாராம்.
இது போன்ற வேறொரு திட்டத்தை தாம் யாழ்ப்பாணத்தில் செய்ய உள்ளதாகவும் சுமந்திரன் கூறினாராம்.