
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் மாதாந்த வெளியீடான் ஞானச்சுடர் 322 வது ஆன்மீக மலர் வெளியீடு சந்நிதியான்
ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில், காலை 10.45 தொடக்கம் 12.00 மணி வரை இடம்பெற்றது.


ஐப்பசி மாத ஞானச்சுடர் இதழான 322 ஆவது மலர் வெளியீட்டு நிகழ்வில்,
வெளியீட்டுரையினை வில்லிசை மாமணி க.சத்தியதாஸ் அவர்களும்,
மதிப்பீட்டுரையினை ஆசிரிய ஆலோசகரும் , சைவப் புலவரும்மான செ.கந்த சத்தியதாசன் அவர்களும் ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கப்பட்டன.






இதேவேளை வடமராட்சி வடக்கு, வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலகங்களின் முதியவர்களை கௌரவிப்பதற்கா முதியவர்களுக்கான உடைகள் ரூபா 70000/- பெறுமதியில் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்