
இன்றையதினம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியிலிருந்து சங்கரத்தை பக்கமாக 200 மீட்டர் தூரத்தில் வைத்தியர் ஒருவருடைய காரும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.




இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விபத்து குறித்து விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.