
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.






சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும் அவரது மனைவிவியுமான மாணிக்கம் சுப்பிரமணியம் 53, அவரது மனைவி மேரி 54 ஆகியவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருவதுடன், பருத்தித்துறை நீதிமன்ற கௌரவ நீதவான் நேரடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டுளதுடன் சடலங்களை பருத்தித்துறை ஆதர வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.