களமுனையில் போராடி தாயக மண்ணிலே உறங்கும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவும் தாயக நிலப்பரப்பிலே மக்களின் நிம்மதியும் சுதந்திரமுமே என்று பரப்புரை கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான போராளி சி.வேந்தன் அவர்கள் கருத்துரைத்தார்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு கோரிய பிரச்சார கூட்டம் கடந்த 25.10.2024 அன்று மாலை 05.30 மணிக்கு வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் இடம்பெற்றது இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்
போராளிகளுக்கான அரசியல் அங்கீகாரத்தை மக்கள் நிச்சயமாக வழங்குவார்கள் என்கின்ற நம்பிக்கை உள்ளதுடன் போராளிகள் கடைசி வரையிலும் மக்களின் நலனிலும் தாயகத்தின் மீட்சியிலும் மாத்திரமே அக்கறை கொண்டவர்கள் என்றும் தெரிவித்தார். மாவீரர்களின் தியாகங்கள் வீண்போக விடமாட்டோம் என்றும் மாவீரர் பெற்றோர்களுக்கான மரியாதையுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் தகுந்த தீர்வை பெற்றுத்தர போராளிகளால் மாத்திரமே முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் அபிவிருத்தியுடன் கூடிய சரியான தாயக சுய நிர்ணயமே தமது இலக்கு என்றும் மக்கள் மீது மாத்திரமே நம்பிக்கை உள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார் .
இந்த பரப்புரை கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள், முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.